Our Thenral Mullai Tamil Magazine

நம் தமிழ்ச்சங்கம், நம்மவர்களின் எழுத்தாற்றலையும், ஓவியக்கலையையும் ஊக்குவிக்கும் பொருட்டு, “தென்றல்முல்லை” என்ற சிற்றிதழை பல்லாண்டு காலமாக வெளியிட்டு வருகிறது.. இவ்விதழானது ஆண்டிற்கு நான்கு முறை வெளியிடப்படும்.

இவ்விதழில், இலக்கியக் கட்டுரைகளும், சிறார்களின் கட்டுரைகளும், கவினுறு ஓவியங்களும் காணக் கண்ணிரண்டும் போதா.

அம்மட்டோ! இந்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரும், “தென்றல்முல்லை” விரும்பிப் படிக்கும் தமிழ்ப் புத்தகங்களில் இதுவும் ஒன்று எனில் அது மிகையாக.

இச்சிறப்பு மிக்க இதழை ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆசிரியர் குழு “கருமமே கண்ணினராய்ப்” பணியாற்றி இவ்விதழை வெளிக்கொணரும்.

How to Send your Articles/Drawings to Thenral Mullai Tamil Magazine?

கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வமுள்ளவர்களை, நமது வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வெளியிடும் தென்றல் முல்லை பத்திரிகையில் வெளியிடும்படியாகத் தங்கள் படைப்புக்களை அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தங்களின் குழந்தைகளின் எழுத்துக்கள் அல்லது ஓவியங்கள் மற்றும் தங்கள்படைப்புகள் ( கட்டுரை, கவிதைகள்) ஆகிவற்றை அனுப்ப வேண்டுகிறோம். படைப்புகள் குழந்தைகள் பற்றியதாக அமைந்திருத்தல் நன்று. தவிர, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைத் தொலைபேசி வழியே நேர்காணல் கண்டு வெளியிட விரும்புகிறோம். பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உடனே தொடர்பு கொள்ளவும். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு பக்கங்களில் தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

படைப்புகள் பற்றி:

 1. தமிழில் இருக்கவேண்டும்
 2. Microsoft Wordல் இருக்கவேண்டும்
 3. தலைப்பு வேண்டும்
 4. ஆசிரியர் பெயர், புகைப்படம் வேண்டும்
 5. இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் வேண்டும்
 6. உங்கள் படைப்புகளை [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 7. மதம், ஜாதி, இனம், நிறம், முதலிய பிறரை தாக்கத்துக்குள்ளாக்கும் கருத்துக்களைத் தவிர்க்கவேண்டும்
 8. DC பகுதியில் உள்ளவர்களது படைப்பாக இருக்கவேண்டும்
 9. தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் படைப்புகளாக இருத்தல் நல்லது
 10. சொந்தப் படைப்பாக இருக்கவேண்டும்.
 11. படங்கள் Line drawing மேல் வண்ணம் மட்டும் தீட்டியதாக இல்லாமல், முழுவதும் சொந்தமாக வரைந்ததாக இருக்கவேண்டும்.
 12. எல்லா படமும் landscape ல் (படுத்தவாக்கில்) இருக்கவேண்டும்.

உறுப்பினராவதற்கு: http://www.washingtontamilsangam.org/members/

மின்னஞ்சல் முகவரி(Email) : [email protected]

படைப்புகளை அனுப்பும்போது தங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். தங்கள் படைப்பினை அனுப்பிய பின் அது கிடைத்ததற்கான பதில் வரவில்லையெனில் உடனே இதழாசிரியரை (301) 605-4913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.(குறிப்பு: படைப்புக்கள் அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை ஆசிரியர்குழுவிற்கு உண்டு)

நன்றியுடன்,
தென்றல் முல்லை ஆசிரியர் குழு


2022 ஆண்டிற்கான தென்றல் முல்லை ஆசிரியர் குழு

முதன்மை ஆசிரியர்
சுமித்ரா பாபுகணேஷ் ([email protected])

இணை ஆசிரியர்கள்
பாலா குப்புசாமி
மோகன்ராஜ் அண்ணாமலை

துணை ஆசிரியர்கள்
விஜயா செல்வா சிவப்பிரகாசம்
அபிநயா மோகன்குமார்
மோனிகா ஜெரால்டு
ரஹீமா அலாவுதீன்
அகிலா ராமநாதன்
ஸ்ரீராம் கல்யாணசுந்தரம்

சிறப்பாசிரியர்கள்
நாஞ்சில் இ.பீற்றர்
மீனாட்சி சந்திரசேகர்

தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள்

அறிவுப்பொன்னி துரைசந்திரசேகரன்(வள்ளுவன் தமிழ் அகாடமி)
கமலாபாரதி பச்சையப்பன் (மேரிலாண்ட் தமிழ் கல்விக்கழகம்)
மகேஷ் அறக்கட்டளை (சங்கமம் தமிழ்பள்ளி )
சந்தோஷ் செல்வராஜ் (பாரதியார் தமிழ்பள்ளி )
ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் (டேலண்ட் தமிழ்ப் பள்ளி)

செயற்குழு தொடர்பாளர்கள்

ஹேமப்பிரியா பொன்னுவேல்
விஜயகுமார் சத்யமூர்த்தி
சுவாமிநாதன் நித்யானந்தம்