நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க வரலாற்றில் 43 ஆண்டுகளில் முதன்முறையாக சிறப்பிதழாக 2021 ஆண்டு மலர் மிகக் குறுகியக் காலத்தில் சிறந்த திட்டமிட்டலுடனும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் குழுவின் உதவியுடனும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது
மூன்று மாதங்களில் நடக்கும் நிகழ்வுகளை விவரித்தும், பலப் படைப்பாளர்களின் படைப்புகள் குழந்தைகளின் கட்டுரைகள் மற்றும் வண்ண ஓவியங்கள் எனக் காலாண்டு பதிப்பாக தென்றல் முல்லை தங்குதடையின்றி தென்றலாக வீசிக் கொண்டுஇருக்கும் போதிலும் இந்த ஆண்டு மலர் நம் தமிழ்ச்சங்கத்தின் இந்த ஆண்டு சாதனைகளை மட்டும் விவரிக்காமல் நம் வரலாறு, தலைவர்களின் அறிமுகம் அவர்களின் காலகட்டத்தில் நடந்தேறிய நிகழ்வுகள், தன்னார்வலர்கள்,மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாடுகள் எனப் பலவற்றையும் ஒருங்கிணைத்து ஆவணப்படுத்த திட்டமிட்டுக் கொண்டு வந்துள்ளோம். இது ஒரு சிறந்த முன்னெடுப்பதற்கு வித்தாகும் என நம்புகிறோம்
மிகக் குறுகியக் காலத்தில் சிறந்த முதல் ஆண்டு மலரை வெளியிட கடினமாக உழைத்து வெற்றிகண்டுள்ள ஆண்டு மலர் ஆசிரியர் குழுவினற்கு மனமார்ந்த வாழ்த்துகளும்… பாராட்டுகளும்…
தன்னார்வலர்களுக்கும், ஆதரவு கொடுத்த அனைத்து தமிழ் அன்பர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றிகள் பல…