தென்றல் முல்லையின் அடுத்த இதழ் முத்தமிழ் சிறப்பிதழாக மலர உள்ளது.இது வரும் நம் முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் வெளியிடுப்பட இருக்கிறது. இவ்விதழுக்காகத் தங்களின் குழந்தைகளின் எழுத்துக்கள் அல்லது ஓவியங்கள் மற்றும் தங்கள்படைப்புகள் ( கட்டுரை, கவிதைகள்) ஆகிவற்றை அனுப்ப வேண்டுகிறோம். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு பக்கங்களில் தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி: thenral.mullai@gmail.com

படைப்புகளை அனுப்பும்போது தங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். (குறிப்பு: படைப்புக்கள் அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை ஆசிரியர்குழுவிற்கு உண்டு)

சித்திரை விழாவுக்கான தென்றல் முல்லை இதழைப் பெறாதவர்கள், கீழ்கண்ட தமிழ்ச்சங்க நிகழ்வுக்கு வருகை தரும்போது பெற்றுக்கொள்ளலாம்

ஞாயிறு, 06/17/2018 – தொல்காப்பியத்தின் சிறப்பு நிகழ்ச்சி

நன்றியுடன்,
தென்றல் முல்லை ஆசிரியர் குழு