“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
― மகாகவி பாரதி
தமிழ்ச்சங்க வரலாற்றில் 43 ஆண்டுகளில் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ’மகளிர் மட்டும்’ நிகழ்ச்சி நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
நம் தமிழ்ச்சங்கத்தின் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளிலும் நம்மூர் பெண்கள், தங்கள் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுக்காக அவர்களைக் கவனிப்பதிலேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவை ஏதுமில்லாமல் ஒரு நிகழ்ச்சி, அதுவும் பெண்களுக்காகவே மட்டும் அவர்கள் பார்த்து, ரசித்து, கேட்டு, விளையாடி உற்சாகமாய்க் களிப்புற மட்டுமே எங்கள் சிந்தனையில் முதன் முதலில் உங்களுக்காக இனிதாய் தொடங்கப்பட்டதே ’மகளிர் மட்டும்’ .
பள்ளி நாட்களையும், கல்லூரி நாட்களையும், மலரும் நினைவுகளாகக் கொணரும் வண்ணம், பெண்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும் நிகழ்ச்சியாக மலர இருக்கிறது நம் மகளிர் மட்டும் நிகழ்ச்சி!
காண வாருங்கள், கலந்து கொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் ‘ மகளிர் மட்டும்’
அக்னி சிறகே எழுந்துவா!
உன் ஒளிவிடும் கனாவைச் சேர்ப்போம் வா
சிங்கப்பெண்ணே!!