நீங்கள் கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வமுள்ளவர்களா?
நமது வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வெளியிடும் தென்றல் முல்லை பத்திரிகையில் வெளியிடும்படியாகத் தங்கள் படைப்புக்களை அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தங்களின் குழந்தைகளின் எழுத்துக்கள் அல்லது ஓவியங்கள் மற்றும் தங்கள்படைப்புகள் ( கட்டுரை, கவிதைகள்) ஆகிவற்றை அனுப்ப வேண்டுகிறோம். படைப்புகள் குழந்தைகள் பற்றியதாக அமைந்திருத்தல் நன்று.
தவிர, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைத் தொலைபேசி வழியே நேர்காணல் கண்டு வெளியிட விரும்புகிறோம். பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உடனே தொடர்பு கொள்ளவும். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு பக்கங்களில் தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.
மேலும் படைப்புகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்: .https://tsgwdc.org/thenral-mullai/
முந்தைய இதழ்களைப் படிக்க : https://tsgwdc.org/thenral-mullai/thenral-mullai-magazines/
படைப்புகள் அனுப்ப கடைசி தேதி : வியாழக்கிழமை, செப்டம்பர் 1, 2022
படைப்புகள் அனுப்ப மின்னஞ்சல் முகவரி(Email) : thenral.mullai@gmail.com
படைப்புகளை அனுப்பும்போது தங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். தங்கள் படைப்பினை அனுப்பிய பின் அது கிடைத்ததற்கான பதில் வரவில்லையெனில் உடனே இதழாசிரியரை (301) 605-4913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: படைப்புக்கள் அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை ஆசிரியர்குழுவிற்கு உண்டு