அன்பு தமிழ் நெஞ்சங்களே, வணக்கம்,
இந்த மாதம் ஜூலை 24 மற்றும் ஜூலை 31,2022 தேதிகளில் நடைபெற்ற நம் தமிழ்ச் சங்கத்தின் “கோடைக் கொண்டாட்டம்” நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!
நம் தமிழ் சமுதாயத்துடன் ஒன்றுகலந்து, உள்ளம் மகிழ்ந்து, புது உறவுகளை கண்டறிய இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். அரசு மற்றும் தமிழ்ப் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும் நேரம் இது.
உங்கள் குழந்தைகளின் கல்விப் பயணம் மற்றும் தமிழ்க் கல்வி கற்றல் இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் வெற்றிப் பயணமாக அமைய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் இனிய வாழ்த்துகள்!!!
நமது பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி அறிந்துகொள்ள:https://tsgwdc.org/community/tamil-schools/
ஒரே மாதத்தில் முத்தாய்ப்பாய் முப்பெரும் விழாக்கள் .. ஜூலை 9 : முத்தமிழ் விழா ஜூலை 24: கோடைக்கொண்டாட்டம் – விர்ஜினியா ஜூலை 31 – கோடைக்கொண்டாட்டம் – மேரிலாண்ட்
இவையனைத்தும் வெற்றிகரமாக நடத்த உறுப்பினர்களாகிய நீங்களும் தன்னார்வலர்களுமே காரணம் ….உங்கள் அனைவருக்கும் மீண்டும் உள்ளங்கனிந்த நன்றிகள் பல …
இந்த பசுமை நிறைந்த நினைவுகளோடு உங்கள் அனைவரையும் ஆவலுடன் அடுத்து வரும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் சந்திக்க காத்துக் கொண்டுள்ளோம்.
கோடைக்கொண்டாட்டம் புகைப்படங்களைக்காண : https://photos.app.goo.gl/gZ5JWtYENsMQ3KxP8

For More Info: https://tsgwdc.org/Become a Member: https://members.tsgwdc.org/members/

Follow Us & Stay Informed: https://linktr.ee/TSGWDC


இது நமது தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!!
தங்களின் அன்புள்ள,

செயற்குழு மற்றும் தன்னார்வலர்கள் – வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்