வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் 43 ஆண்டுகளில் முதல் முறையாக உலக மகளிர் நாளை முன்னிட்டு , ‘மகளிர் மட்டும்’ திட்டம் மார்ச் 2022 மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு மார்ச் 12, 2022 அன்று நடைபெற இருந்தது, ஆனால் மோசமான வானிலை காரணமாக, பள்ளி அரங்கம் மூடப்பட்டதால் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே….

என்பதர்க்கு ஏற்ப இரண்டு நாட்களில் வேறொரு இடத்தை பதிவு செய்து அதன்படி விழாவை உறுதி செய்தோம்.

தமிழகத்திலிருந்து வந்திருந்த பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி விழா தொடங்கியது. ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் முன்னுரிமைகளை எவ்வாறு அமைப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்களுடன் இந்த நிகழ்வு ஒரு சிறப்பம்சமாக இருந்தது. வண்ண வண்ண உடையில் வந்தவர்கள் அனைவரும் ஆடை அணிவகுப்பு நடத்தி, நண்பர்களுடன் உரையாடி, சுவையான சைவ, அசைவ உணவு உண்டு, பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். பலர் தங்கள் பாடும் திறமையையும் வெளிப்படுத்தினர். பல குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (குறள் 666:)

மு.வரதராசன் விளக்கம்:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

Event Photo Album : https://photos.app.goo.gl/kczvKWeEWRpVrA1q7

விழாச்சிறப்பாக நடைபெற உதவிய தன்னார்வலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் என அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்.