அன்புத்தமிழ் உறவுகள் அனைவருக்கும்  வணக்கம்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரைத் திருவிழா-2022 மே மாதம் 8-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை Annandale High School-ல்  வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கவிஞர்  நந்தலாலா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம், Vasanth Vaseegaran – V# Gurukulam – Music Learning Redefined குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி , வாழையிலையில் வடை பாயசம் உணவு, பெட்டிக்கடை,  பறையிசை முழக்க வரவேற்புடன் முளைப்பாரி ஊர்வலம், வரவேற்பறையில் கனிகள் கொண்டு அலங்காரம் ,  என்று மிகப்பெரிய அளவில் சித்திரை விழா மிகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  நமது சங்கமம் தமிழ்ப்பள்ளி  மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் முத்தாய்ப்பாக அமைந்திருந்தன‌ .

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின்  வரலாற்றில் முதல் முறையாக 2022-2023 ஆண்டுக்கான  நாள்காட்டி நமது மேனாள் தலைவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நமது  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டு இதழான தென்றல் முல்லை இதழ் அச்சடிக்கப்பட்டு சிறப்புவிருந்தினர் கவிஞர் நந்தலாலா அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது.

நமது இளமை நாட்களை இனிதே நினைவூட்டிய‌ “வாசிங்டன்தமிழ்ச்சங்கப் பெட்டிக்கடை”-யில் வைத்திருந்த‌ நாவூறும் நம்ம ஊர் தின்பண்டங்கள் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் விற்றுவிட்டன.

உறுப்பினர்கள் அனைவருக்கும் தென்றல்முல்லை இதழ் , நாள்காட்டி, மற்றும் கைப் பை (Non-woven Bag ) மற்றும் அன்று அன்னையர் நாள் என்பதால் அனைத்து அன்னையர்களுக்கும் வாழ்த்து அட்டைகளும்  வழங்கப்பட்டன .

இவ்வாறு சித்திரை விழா வெற்றிகரமாகவும் சிறப்பாகவும்  நடக்க உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும், நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து,  ஊக்குவித்த தமிழ்சங்க உறுப்பினர்களனைவருக்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவினர் அனைவரும்  மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சித்திரைத் திருவிழா சிறப்பிதழ் : https://issuu.com/thenralmullai/docs/tsgw_tm_2022_1

மற்றும்  முன்னாள் வெளியாகியுள்ள‌ தென்றல் முல்லை  இதழ்களையும் நீங்கள் நமது தமிழ்ச்சங்க‌  இணையதளத்தில் படித்து மகிழலாம்.

பெருந்தொற்றுக்குப்பிறகு இந்த வரலாற்று சிறப்புமிக்க சித்திரை விழாவிற்காக  அல்லும் பகலும் அயராது உழைத்து வெற்றியடையச் செய்ய உதவிய‌ அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் , கொடை வள்ளல்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் இன்றே உறுப்பினராகப் பதிவு செய்யவும். உங்களின் ஆதரவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக திட்டமிடப்படுகிறது.

சித்திரை விழாவின் புகைப்படங்களைக் காண: https://photos.app.goo.gl/wNFfHP1MgVU78nHA9

சித்திரைத் திருவிழா சிறப்பிதழ் : https://issuu.com/thenralmullai/docs/tsgw_tm_2022_1

2022-2023 ஆண்டுக்கான நாள்காட்டி:   https://issuu.com/thenralmullai/docs/tsgw2022_calendar-compressed

இது நமது தமிழ்ச்சங்கம்; நாம் அனைவரும் அதன் அங்கம்.

வாழ்க தமிழ்! வளர்க நம் ஒற்றுமை!!

நன்றியுடன் என்றும்,

உங்கள் தோழி ,

ஹேமா பொன்னுவேல்