இலக்கியத் திரையிசை நிகழ்ச்சி
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ் ஊடகம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ் இலக்கியத்தோடு தொடர்புள்ள திரைப்படப் பாடல்கள் பற்றிய ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், திரைப்பாடல்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, தமிழ் இலக்கியத்தோடு தொடர்புள்ள திரைப்படப் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்து அவற்றைப் பற்றிச் சொற்பொழிவாற்றவும் தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு அளிப்பதாகும்.
இந்த நிகழ்ச்சிக்கான விதிமுறைகள்:
- இந்த நிகழ்ச்சி, ஜூலை 23, 2022 மற்றும் ஜூலை 30, 2022 ஆகிய நாட்களில் கிழக்கு நேரம் மாலை 2 மணியிலிருந்து 3 மணிவரை இணையவழியாக நடைபெறும்
- இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் தமிழ் இலக்கியத்தோடு தொடர்புள்ள ஒரு திரைப்படப் பாடலைத் தேர்ந்தெடுத்து, அந்த இலக்கியப் பாடலையும் திரைப்படப் பாடலையும் பற்றி ஆய்வு செய்து, அந்தப் பாடல்களைப் பற்றி ஐந்து மணித்துளிகளுக்கு மிகாமல் ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து, திரைப்படப் பாடலை இசையோடு பாட வேண்டும். சொற்பொழிவும், இசையோடு கூடிய பாடலும் பத்து மணித்துளிகளுக்குள் முடிவுபெற வேண்டும்.
- இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு பத்து பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அடுத்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கு வாய்ப்பு அளிப்பதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்.
- இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தை 07/01/2022 க்குள் அனுப்ப வேண்டும். இந்தத் தேதிக்குப் பின்னர் வந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படமாட்டா. முதலில் வந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்: விண்ணப்பப் படிவம்
- அமெரிக்காவில்(USA) உள்ள அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
- மூன்று பேர் அடங்கிய நடுவர்குழுவினரால் சிறந்த மூன்று பாடகர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிறந்த மூன்று பாடகர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்