தமிழ் பேச்சுப் போட்டி 2022

“பொங்கு தமிழ் பொங்கட்டும்” பொங்கல் திருவிழா 2022 முன்னிட்டு நடைபெற்ற தமிழ் பேச்சுப் போட்டி நிகழ்ச்சி இன்று நடை பெற்றது .1/20/22 – வியாழன் இரவு ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டுச் சிறப்பித்த அனைத்துக் குழந்தைகளுக்கும்; அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். பங்குபெற்ற அனைவருமே நடுவர்கள் வியக்கும் வண்ணம் சிறப்பாக உரையாற்றினார்கள் !

இணையவழி பொங்கல் விழா 2022

“பொங்கு தமிழ் பொங்கட்டும்” வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் இணையவழி பொங்கல் திருவிழா !!! மக்கள் இசையில் தன்னிகரற்ற நாட்டுப்புறப் பாடகர்கள் செந்தில்-ராஜலட்சுமி சிறப்பு இசை நிகழ்ச்சியுடன்மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் அவர்களுடன் கோவிட்-19/ஓமிக்ரான் தொற்று பற்றிய சிறப்பு உரை என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவருடன் உங்கள் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டுத்தெரிந்துகொள்ள இங்கே பதிவிடவும் Submit Your Read More

அறிவிப்பு :இணையவழி பொங்கல் விழா 2022

தற்போது கோவிட் ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன், அரங்கில் நடக்கவிருந்த நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் நிகழ்வை நம் தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக மெய்நிகர் நிலைக்கு மாற்றுகிறோம். இணைய வழி விழாவில் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்