MuthamizhVizha2022_Stage

ஜூலை 09, 2022  வாசிங்டன் வட்டாரத் தமிழ்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி!

கோடைவிடுமுறையில் நடக்கும் முத்தமிழ்விழா என்றுமே சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும் அதுவும் இந்தக்கோடை பலபல சவால்களைக் கொண்டது …இரண்டு/மூன்று வருடங்களுக்குப் பிறகு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தியா சென்றிருந்தாலும் கோடைவிடுமுறையில் நடக்கும் முத்தமிழ்விழா நிகழ்வில் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளீர்கள்.

முத்தமிழ் விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.பாரம்பரிய பரதநாட்டியத்தை இரட்டையர் சிறப்பாக ஆடினார்கள், கிராமிய மணம் கமழும் நாட்டுபுற இசைக்கும், திரை இசை பாடலுக்கும் குழந்தைகளும், இளைஞர்களும் நடனமாடினார்கள்.

சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.தமிழறிஞர் பெருங்கவிக்கோ ஐயா சேதுராமன் அவர்கள் தமிழின் பெருமையை விளங்கி, உலகத்தமிழர் ஒருமைப்பாட்டினை முன்னிருத்தி சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
நடிகர் மற்றும் இயக்குநர் பாண்டியராஜனுடன் கலகலப்பான கலந்துரையாடல் நடைப்பெற்றது. சன் செய்திகள் தலைமை ஆசிரியர் மு குணசேகரன் M Gunasekaran வழங்கிய சிறப்புரை . இசை இளவரசன் லிடியன் நாதஸ்வரம் (Lydian Nadhaswaram) பல இசைக் கருவிகளை திறம்பட வாசித்து அனைவரையும் மெய்மறக்க செய்தார்.
“எஞ்சாய் எஞ்சாமி” பாடிய தமிழ் ராப் பாடகர், தெருக்குரல் அறிவு (Therukural Arivu) வழங்கிய இசைக்கச்சேரி அரங்கத்தை அதிரவைத்தது.

தொடர்ந்து நம் பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு நம் தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை தெரிவிப்போம். அனைவரும் உறுப்பினர்களாக இணைந்து, நிகழ்ச்சிகளில் நாமும், நம் குழந்தைகளும் பங்கேற்று தமிழராக இணைந்திருப்போம்.

விழாப் புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்கவும் :

Album 1: https://photos.app.goo.gl/cnyyF3wCgZsXjyoV8
Album 2: https://photos.app.goo.gl/agJCDGjo8gKsh8xd7
Album 3: https://photos.app.goo.gl/BBy3ydNLzu8LK3Wn8
PC: Arun, Thanga Palanisamy & VisMaya Media

சைவ அசைவ அறுசுவை உணவைப் பரிமாறிய Kaveri usa உணவகத்திற்கு வாழ்த்துகள் !!!

உங்கள் கருத்துக்களை தொடர்ந்து செயற்குழுவிற்கு தெரிவியுங்கள். இது எதிர்வரும் நிகழ்வுகளை மேம்படுத்த உதவும் . குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்… நிறைகளை சபையில் சொல்லுங்கள் ……
முத்தமிழ் விழா குறித்த உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடவும் : https://forms.gle/JRVtj3q21UuWyMCWA

Follow Us & Stay Informed: https://linktr.ee/TSGWDC
இது நமது தமிழ்ச்சங்கம்!
நாம் அனைவரும் அதன் அங்கம்!!